நல்ல நேரம்

வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார் தன் மனைவிடம் சீக்கிரம் நல்ல நேரம் பார்த்து சொல்லு இல்லனா போகுற காரியம் கெட்டுவிடும் என கூறி நாற்காலியில் அமர்ந்துகொண்டார்

அவரது சின்ன மழலை பின்பக்கமாக வந்து அவரது மூக்கினை கைகளால் இறுக்கிப் பிடித்தாள் அவருக்கு மூச்சு முட்டுவதை போல் இருந்தது அவள் கைகளை உதறி தள்ளிவிட்டு உனக்கு அறிவில்லையா ஏன் இப்படி பன்ற என சினந்து கொண்டார்

கெட்ட நேரத்துல மூச்சு இழுத்தா உங்க உடம்பு கெட்டுவிடும்லாம்பா அதான் அப்படி பண்ணேன் அது தப்பாப்பா எனக் கேட்டாள்.

ஒன்றும் பேசமுடியாதவராய் அமைதியாய் வெளியே சென்றார் ..

எழுதியவர் : கவிபுத்திரன் சபி (17-Mar-15, 10:26 am)
பார்வை : 409

சிறந்த நகைச்சுவைகள்

மேலே