கண்ணீர் மழை
உன்னை முதல் முதலாய்
சந்தித்த நாளில்
சந்தோஷ மழை.
உன்மேல் காதல் தோன்றி
சொல்ல முடியாது
தவித்த நாட்களில்
புயல் மழை.
சொன்னபோது
அதிர்ந்த உன்
முகபாவனையால்
இடிமழை.
உன் மௌனத்தில்
வரட்சிக் காலமொன்றில்
புன்னகை பரிசளித்து
நீ என் இதயம்
பிடுங்கிக் கொண்டது
கோடைமழை.
நானும் நீயும்
கைகோர்த்துத் திரிந்த
ஆனந்த நாட்களில்
நமக்குள் எப்போதும்
அடைமழை.
காதல் மழையில்
கண்மூடித்தனமாய்
நனைந்து
திருமணக் காய்ச்சல்
ஏற்பட்டபோது
நமது குடும்ப
ஆஸ்பத்திரிகளில்
கொடுக்கப்பட்ட
உபதேச மருந்தில்
நீ குணமாகி
மணமாகியதில்
எனக்குள் மட்டும்
இன்னும் கண்ணீர் மழை.
*மெய்யன் நடராஜ்

