நட்பு=காதல்=அன்பு ======தொடர் =பகுதி 7

7
#############################################
மாதா....
பிதா...
குரு....
தெய்வம்...
நீ....

உன்னோடு
ஐவரானது
நான் தொழும் வரிசை
#########.நன்றி : ரமேஷாலம் (15 .09 .12 )

############################################
7
குட்டிகளின் உறவில்
தாயின் பகை மறைக்கும்
அதிசயக் கம்பளம் நீ......

எனவேதான்
எரிகிறது என் பரம்பரை.
அந்த வெப்பத்திலும்
பொசுங்கும் என்முகம் ...

“எத்தனை பேர் கண்களில்
ஏமாற்ற நீர் வீழ்ச்சி!

“என் வீட்டில் கை கழுவ
அவர் வீட்டில் என் உணவு!
அவர் உணவு என் வீட்டில்
எச்சில் அலம்ப
நீர் அவர் வீட்டில்”

பகைமுலாம் பூசிய
போலி நட்பு வரிகளை
எழுதும் துரோக கவிதைக்கு
எப்படி இப்படி
விரல்கள் குனிந்தன…?

இந்தத் துயரங்களின் கனம் அறிய
இமயத்தை எடை பார்த்து
எட்டால் பெருக்கிப் பார் ­ புரியும்

இப்படியெல்லாம்
புலம்பலாகி மட்டுமா போனது
நம் நட்பு…?

அன்றியும்
எப்போதும் பொது நலத்தோடு நான்
சுயநலத்தோடு நீ!
புரிந்தது .

உன் தொழில் முறை விரிசலில்
என் தூக்கத்தை அடகு வைத்து
உன் உயிர் காத்திட
வீதியில் நின்ற நீள் கம்பு நான்!
தோள் கொடுத்த எனக்கு
தேள் கொடுக்காய் நீ
தாங்குமா நெஞ்சம்?!

நீயும் நானும்
பேசிய கணங்களின் வீச்சுகள்
காற்றில் கலந்து , மிதந்து
எங்கெங்கோ சென்றதே...
மீண்டும்
உன்னுடன் வந்து
என் நலம் உசாவினால்
-அன்றைய நமது உறவு போலி என்பாயா..?
அன்றி
இன்றைய பிரிவு நிஜம் என்பாயா....?

காதலில் இதெல்லாம் சகஜம் என்று
எவன் சொன்னான்...
நட்பில் இதெல்லாம் சாதாரணம் என்று
எவன் சொன்னான்...
எந்த சேர்தலும் சேதாரம் இல்லை
எந்த பிரிவும் சதா ரணமே...
வழிவது உண்ணீர் மற்றுமல்ல
நினைவுகளும்...நேசமும் தான் ........

நேற்று என்பதல்லாம்
இன்றுதான் உனக்கு
உனது வாழ்க்கைத்தடத்தில்
பலருக்கும் இந்நிலைதான்...
நான் மட்டும் என்ன விதிவிலக்கு...

நட்பின்
உயிர் எழுத்து மறைக்கும்
நீ
உன் வாழ்விலாவது இனி
மெய் எழுத்துக்களால் நிரப்பு...
நமை அறிந்தவர்களிடம்
இன்னமும் உள்ளது
ஆய்த எழுத்துக்கள்...

இன்னமும் தேடுவோம்

எழுதியவர் : அகன் (17-Mar-15, 5:02 pm)
சேர்த்தது : agan
பார்வை : 120

சிறந்த கவிதைகள்

மேலே