பாடல்
மாலை வந்ததும் உன் ஞாபகம்
ராசியானது என் ஜாதகம்
ஆசை ஆயிரம் கூடும் நேரம் பாடும் நேரம்
ஆடுகின்ற காதல் நாடகம்
வாழ்ந்து பார்க்க வா வா
வாட்டம் தீர்க்க வா
ஏங்காதே மானே உன் மாமன் நானே
என்னோடு வாடி கண்ணே
பூவான கையில் உண்டான மையல்
போராடும் காதல் முன்னே
கையோடு இங்கே வந்தாடு பெண்ணே
கண்ணான ஆசைக் கண்ணே
காதோடு பேச ஏதேதோ உண்டு
கேளாயோ எந்தன் முன்னே
வாடும் வாலிபம் பாடவும்
வாலைப் பெண்ணுடன் ஆடவும்
நேரம் வந்து சேர்ந்தது நீயும் கூட வந்தது
காமன் தொல்லை என்னவென்பது
வாழ்ந்து பார்க்க வா வா
வாட்டம் தீர்க்க வா
நான் காதல் மன்னன் உன் ஆசைக் கண்ணன்
முப்பாலில் ஒன்றானவன்
எப்போதும் இன்பம் என்கின்ற கொள்கை
கொள்கின்ற ஓர் வாலிபன்
நாள் கூடிப் போனால் காலங்கள் ஆனால்
வீணாகும் உன் வாலிபம்
வாழ்கின்ற போதே வாட்டங்கள் தீர்ந்தால்
என்றென்றும் இன்பம் வரும்
வாடை தீரடி காதலி வந்து கூடடி மாதவி
மாது நல்ல மாதுதான் தோது நல்ல தோதுதான்
நேரம் கூட நல்ல நேரம்தான்
வாழ்ந்து பார்க்க வா வா வாட்டம் தீர்க்க வா