சுவையான கோலங்கள்

சீட்டுக் கவி..
ஓலை செய்தி ..
காகிதத்தில்..
கப்பல் கப்பலாய்
காதல் சேதிகள் ..
இன்லாண்டு கவரும்
இரண்டு கொயர் நோட்டும்
அன்று..காதலுக்குத் துணை..
..
முகநூலும்
வாட்சப்பும்
வைபரும் லைனும் போக
சிரிக்கும் அழகைப்
பார்த்தபடியே காதலிக்க
ஸ்கைப்பும் திகைப்புமாக
காதலுக்கு வாகனங்கள்
தருகின்ற விஞ்ஞானங்கள் ..
எத்தனையோ முன்னேற்றங்கள்..
..
எதுவுமே கொண்டு வருவதில்லை
என் காதலை ஏற்கும் அவள்
கால் விரல்கள்
சொல்லும் நாணத்தை..!