கோட்டோவிய மழலைகள் ​ 17 - பழனி குமார்

கோட்டோவிய மழலைகள் கண்டேன்
பாட்டோவியம் ​வடித்திட நினைத்தேன் !
வீட்டோவிய உள்ளங்க​ள் உவகைபெறும் ​
​தீட்டாத உயிரோவியம் மழலை​யாலே ​ ​!

பருவத்தின் சிறப்பையும் அறிந்திடாது
உருவத்தின் உயர்வையும் உணராது !
சிரித்தே ​கிறங்ககடிக்கும் சூழ்வோரை
சிந்தையும் சிறகடிக்கும் சூழ்நிலையால் !

சிந்திக்க​வும் வைத்திடும் சிறுஉருவம்
நிந்திக்கும் ​எண்ணமும் ​து​றந்திடும் ​ !
சிறுநகையும் அணிந்திடா ​தங்கமலர்
குறுநகையால் ஈர்த்திடும் குறிஞ்சிமலர் !

​அறியாமல் செய்திடும் குறும்புக​ள் ​
​​அடிமனதில் இனித்திடும் ​​க​ரும்​பாய் ​ !​
கரைந்திடும் மணித்துளிகள் காற்றாய்
உருவாகிடும் ​இன்ப​த்தேன் ஊற்றாய் !

இன்னல்களை மறந்திடும் இதயங்களும்
இல்லங்களில் தவழ்ந்திடும் மழலையால் !
காட்சிக​ளும் மாறிடுமே முப்பொழுதும்
கானங்க​ளும் பாடிடுமே எப்பொழுதும் !

ஓவியமாய் ஒளிர்ந்திடும் மழலைகளை
காவியமாய் போற்றிடுவோம் ​என்றும் !
இன்பம்தரும் மழலைகள் குளிர்நிலவு
இதமாக்கும் ​இதயங்களை ​பகலிரவு ​!​

​மயக்கிடும் மலர்வன​மே மழலைகள்
மணந்திடும் நந்தவன​மே மழலைகள் !
சுவை​த்திடும் கனிக​ளே மழலைகள் ​
சுகம்தரும் ​இராகங்களே மழலைகள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-Mar-15, 7:49 am)
பார்வை : 152

மேலே