புதுமைப் பெண்

மனித வாழ்வின் விழுமியம் உணர்ந்து
போதி மரம் நாடிச் செல்ல
நான் என்ன புத்தனா .?
வன்முறையில் எனை அழிக்க
முயலுகையில்
'இறைவா இவர்களை இரட்ச்சித்திடு '
என்றுரைக்க இஜேசுவா.?
கிடைப்பதெல்லாம் கொடுத்துவிட்டு
பொறுமையோடு வறுமையையும்
சேர்த்துக்கொள்ள நான் என்ன
நபிகளாரா .?
மோசமான கயவர்களை
தேசம் விட்டு போக சொல்லி
வயிறு காய்ந்து வாடி நிற்க
அடிகளார் காந்தியா .?
இல்லையே
வாழ்கையை வரி வரியாக படிப்பவள்
போதனையை அல்ல
சாதனை செய்ய நினைப்பவள் .
எதிர்த்து வரும் படைகளை
தனித்து போர் தொடுப்பவள்
இறக்கும் தருணம் வரும் என்றால்
எதிரியின்
தலை கொய்து மடிபவள்.
தனக்கு பின் தானம் என்ற
எண்ணம்கொண்டு வளர்பவள்
பொறுமையின் முதுகிலேறி
அபிநயித்து நகைப்பவள் .
அடிமை படுத்த நினைப்பவனை
அடக்கி ஒடுக்கி வைப்பவள்
அகிம்சை என்னும் ஒரு சொல்லை
அடியோடு வெறுப்பவள் .
விதியை நினைத்து
வேதனை சுமக்கும்
கோழைப் பெண் நானல்ல
மதியை வைத்து விதியை துரத்தும்
புதுமைப் பெண் நானாவேன் .