கிராமத்து வானம்

கயிற்றுக்கட்டில் படுக்கை
வாகன ஒலிகள் இல்லா நிசப்தம்
உடல் தீண்டும் குளிர்காற்று
மின்சார விளக்குகளின் வெளிச்சத்தால்
திருடப்படாத இருண்டவானம்
வெள்ளிப்பரல்களாய் ஜொலிக்கும் விண்மீன்கள்
இதை ரசித்தபோது...
இமைக்க மறந்த விழிகளோடு
இதயம் கொள்ளைபோனது
கிராமத்து வானத்திடம் ..!!