சொல்ல மறந்த காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

என் பிரியமானவளே!
உன்னை தோழி என்பதா?
காதலி என்பதா? புரியவில்லை
இந்த அர்த்தங்கள்.

உன்னை முதன்முதலில்
சாலையோரத்தில் கண்டேன்.
அன்று,செந்நிற சல்வார் புனைந்து
புத்தகப்பையை மார்பில் அனைத்து
அன்னப் பேடாக சென்றாய்,அந்த
இதமான செந்நிற பொழுதில்.......,

சேர்ந்திருக்கும் வேளை
மனதுக்குள் பனிமூட்டம்.
தனித்திருக்கும் பொழுதுகளில்
மனதை சுட்டெறிக்கும் வெம்மை

எந்நிலையை உன்னிடம்
சொல்ல வந்தேன்.புருவத்தின்
அழகில் வியந்து காதலை
கவிதையால் சொல்லாமல்
மழலையால் கொட்டினேன்.

என்னை புரிந்தவள் போல்
கண் சிமிட்டினாய்.அந்த
அழகில் இரு பட்டாம் பூச்சிகள்
சிறகடித்து பறந்தன.அவை
என் மனதினுள் சிறகடிக்காதா..?

நீ புன்னகை புரிவாய், உன்
கன்னத்திலுள்ள மெல்லிய
குழியின் அழகில் சிறை
பிடிக்கப்பட்டோர் வரிசையில்
நானும் ஒருவன்.

என் மலர்கள் தோட்டத்தில்
ஓர் ரோஜா செடியில் இரு
மொட்டுக்கள்.ஒன்றில் உன்
முகம்,மற்றையதில் என் முகம்
மலரும் என் நினைவால்.....,

என் இமைகள் மூடி கனநாட்கள்
சொப்பனங்களிலும் நீதான் பல
கோணங்களில் தோன்றி வேதனை
செய்கிறாயடீ,ஏன்? என் மேல்
அளவற்ற காதலா?வெறுப்பா?
சொல்,என்னுயிரே.......!

என் உயிரை விடவும் ஒரு படி
உன் மீது கொண்ட காதலை சொல்ல
தாமதம் செய்தமையால் உன்
இதயத்தில் இன்னோருவனுக்கு
அங்கத்துவம் கொடுத்தாயா...?

உன் திருமணத்திற்கு என்னையே
முதல் அழைத்தாய்! வாழ்த்துவதா?
என் காதலை சொல்வதா?
தெரியவில்லையம்மா எனக்கு.....,

என் வாழ்வில் திருமணம் என்று
ஒரு நாள் கிடையாது.உன்னை
மணமகள் கோலத்தில் என் கரத்தினால்
தாலி கட்டி வாழ ஆசைப்பட்டேன்.
இனியும் அப்படி ஒரு நாளும் நிகழாது..!

என் இறுதி ஆசையை நீ நிறைவேற்றுவாயா?
நான் இறந்த பின் என்னை காண வந்தால்
உன் மடியில் ஒரு நிமிடம் தூங்க வை! கண்ணீர்
சிந்தினால் அத்துளிகளை என் முகத்தில் பாய்ச்சு...!

நான் கொண்ட காதலை
நீ அறிய என் நாட்குறிப்பையோ?
நோட்டுக்களையோ? புரட்டாதே..!

உன் பாதச்சுவடுகள் தினமும் பதியும்
அந்த சாலையோரத்தடியில் செல்....!
அங்குள்ள வேம்பு மரம் என் காதல்
பாடலை பாடும்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (21-Mar-15, 12:47 am)
பார்வை : 545

மேலே