என் காதலியுடன்
ஆண் : சின்ன சின்னதாய்
சில பொய்
சொல்ல சொல்லுது
உன் இடை.
ஆண்: சின்ன சின்னதாய்
சில மெய்
அள்ளிக்கொள்ள சொல்லுது
உன் .....
ஆண்: தள்ளி,தள்ளி ரசிப்பதில்
சுகம் இல்லை.
பெண்: கிள்ளி,கிள்ளி வைப்பது
என்ன கலை.
ஆண்: போதையேற கொடுக்கணும்
சின்ன இதழ்.
பெண்: பாதை மாறிபோய்விடும்
வேணும் தடை.
ஆண்: கொஞ்ச கொஞ்சமாய்
கொல்லுதடி
உந்தன் இளமை.
பெண்: பஞ்சம் வந்து காஞ்சதைபோல்
ஏன் இந்த மடமை.
ஆண்: காத்திருக்கேன்,காத்திருக்கேன்,
கொஞ்சம் தருவாயா.
பெண்: பூத்திருக்க காத்திருக்கு மொட்டு
கொஞ்சம் பொறுப்பாயா