என்னை காதலிப்பாயாக
இதயம் இறுகியவளா நீ.....
உனக்காக என் இதயமும்
சேர்ந்து துடிக்கிறது.....
அதை நீ புரிந்து கொள்வாய் புன்னகையே.....
என் மனம் பூஞ்சோலையை விட புனிதமாகும்.....
ஏனெனில் அங்கு நீ இருக்கிறாய்....
பூங்காற்றுக்கு காதல் பிறக்குமானால்
அது உன் மேலாகத்தான் இருக்கும்.....
நீ நடந்த பாதைகளில்
உன் காலடி தடங்களை
கண்டே கவிதை எழுதுவேன்
என் காதலியே.....
உன் கண்கள் ஓரத்தில்
இருக்கும் மையினை
கொண்டு ஓவியம் தீட்டுவேன்....
என் என்னவளே....!!!
உன் புன்னகைகக்காகவே
என் ஐம்புலன்களும் காத்துகொண்டிருக்கின்றன....
வானில் தோன்றும் அதிசய ஒளி போல
என்னில் தோன்றிய ஒளியே....
என்னை காதலிப்பாயாக.......