வண்ணங்கள் படைத்ததேனோ
பூவோடும் புல்லோடும் நிறம்பிரித் இங்கு
வண்ண மேன்கொண்டார்?
கூட்டாமாயரம் சேர்த்துக் இன
கொடிக்கு பல வண்ணமிட்டு
சண்டை
போட்டுக் கொள்ளவா??
பூவோடும் புல்லோடும் நிறம்பிரித் இங்கு
வண்ண மேன்கொண்டார்?
பொல்லாப் பேயென்று
இல்லாப் பேய்கொரு நிறமும்,
கல்லா மூடன்
கடவுளுக்கும் நிறம் வைத்து
நல்லாட் கொண்டோனுக்கும்
சூன்யம் வைக்கவோ?
பூவோடும் புல்லோடும் நிறம்பிரித் இங்கு
வண்ண மேன்கொண்டார்?
விதியின் சதியோ?
சதியிட்ட பாவமோ?
கட்டியவன் மாண்டால் கண்ணீரோடு
மங்கைக்கு வெண்ணீ ராடையுங்கொடுத்து
பெண்வானில்
வண்ணமெல்லாம் பிடுங்கி
யாரும் தீண்டாப் பொருளாய் மாற்றவா ?
பூவோடும் புல்லோடும் நிறம்பிரித் இங்கு
வண்ண மேன்கொண்டார்?
தாய்தன் வலி கடந்து ஈன்றப் பிள்ளையில்
அகமழகு காணாது உருவத்தை
கருப்பனென்றும் சிவப்பென்றும்
குறித்து
மனம் வருத்துவதெனோ?
வண்ணங்கள் பிரித்தது ஏனோ?
எண்ணங்களால் சிதைந்த கூட்டம்
சாதியை வர்ணமென
பிரித்து துண்டாகிப் போகவா?
எல்லோரும் எம்மக்கள்
எப்போதும் மேன்மக்கள்
என்பது வானவில் கனவாய்
கலைந்து தான் போமோ?