தண்ணீரே நீ வருவாயே - உலகத் தண்ணீர் தினம்

பூமி சுற்றிலும் நீரின் உலகம் .
உலகம் நிலைபெற உந்தன் வரவு .
வரவினை எதிர்பார்க்கும் மண்ணின் மக்கள் .
மக்களைப் பேணிக் காக்கும் நீரே .
நீரே எந்தன் உயிர் நாடி .
நாடி வந்து எம்மைச் சேர்ந்திடுவாய் .
சேர்ந்திடும் பொழுதினில் சிந்தையில் சிதைவு .
சிதைவினால் சோகம் ; நீயோ பொய்த்தாய் .
பொய்த்துப் போன மேகம் பார்த்தோம் .
பார்த்ததும் மனதினில் பக்குவம் கொண்டோம் .
கொண்டவுடன் பிறந்தது நல்லெண்ணம் ஒன்று .
ஒவ்வொருத் துளியும் நமக்கினி உயிர் நீரென்று
என்று தணியும் எங்களின் தாகம் ?
தாகம் தீர்க்க தண்ணீரே நீ வருவாயே ..!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Mar-15, 9:45 pm)
பார்வை : 111

மேலே