செல்லப்பிள்ளைகள்

நாதியற்றுப் போனதால்
அநாதி ஆனோம்!
ஆனால் இங்கே
தாதிகள் ஆனோம்!
உறவுகளும் இங்கேதான்!
நண்பர்களும் இங்கேதான்!
எங்களுக்குள் பகையுமில்லை!
பேதமுமில்லை,பிரிவினையில்லை!
உரிமையுமில்லை,உடைமையுமில்லை!
பகிர்ந்துண்டு வாழ்கிறோம்!
பண்போடு வளர்வோம்!
நாங்கள்
இறைவனின் செல்லப் பிள்ளைகள்!
அதனால்
செல்வப் பிள்ளைகளாக வளரவில்லை!
இறைவனே
அம்மையப்பன் ஆனதால்
எமக்கு ஒரு
அம்மையப்பனும் தேவையோ..?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (21-Mar-15, 8:43 pm)
பார்வை : 102

மேலே