அவளே என் காதலி
நரகம் என்பது யாதெனில் - என்னவள்
குரல் கேட்டிடா நாட்கள் என்பேன்
சொர்க்கம் என்பது யாதெனில்
அவளே எனது சொர்க்கம் என்பேன்
பாசத்துக்கு மறுபெயரும் அவளே தான் - காட்டிடும்
அன்புத் திமிருக்கும் நிகர் அவளே தான்.
அவளுக்கு நிகர் அவளே தான்
என் உயிருக்கு மேல் என்னவளே தான்
கொஞ்சி குலைஞ்சிடும் தேன் குரலில் - என்
மனபாரங்கள் எல்லாம் மறைகின்றது
லூசு, குரங்கென செல்லமாய் திட்டிட
குறும்பாய் தவறுகள் நான் செய்வேன்