காதல் கசாப்புக் கவிதைகள்
கவிதை
காதலைப் பற்றி
எழுதலாமா
கசாப்பைப் பற்றி
எழுதலாமா
என்று யோசித்த வேளையில்
அருகே ஒரு ஆடு
இலை மேய்ந்து கொண்டிருந்தது
ஆட்டிற்கு அடித்தது அதிர்ஷ்டம்
ஆகாயத்தைப் பார்த்தவாறு
ஆட்டிற்காக அழகிய வரிகள் யோசித்தேன்
எழுதக் குனிந்த போது
எதிரே சாலையில்
ஆடு சைக்களில் பயணித்துக் கொண்டிருந்தது
தலை ஒரு புறம் உடல் ஒரு புறமாக
சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த பெட்டியில்
எழுதியிருந்தது ஒரு வரி மோனைக் கவிதை :
மகாத்துமா காந்தி மட்டன் ஸ்டால்
------- கவின் சாரலன்