இது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்ம் - டைரி 2004
இது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்ம் - டைரி 2004
==================================================
உன்னிடம் விக்காமல் சமர்ப்பிக்கும்
அனர்த்தங்கள் யாவும்
அனர்த்தங்களேயென அறிந்தவள் நீ
நிறைய நகைச்சுவை
அதிகம் அணையுடைக்காத மனக்கிளர்ச்சி
அன்பின் தாகம் ,,
அதிலோர் எதிர்ப்பார்ப்பு
எல்லாமே என் சுண்டுவிரல் நகக்கண்டுக்கூட
உன்னை நெருங்கிடாமல்
பார்வைமட்டுமேத் தொட்டதாக இருக்கும்
இத்திரைக்கதையில்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பனித்துளி பருபூக்க
புலரிலே விரிந்த இரு இதழ்களின் சங்கமத்தில்
வார்த்தை கொடுத்துவிட
மொழியேதுமின்றி
கோபித்த வரிகளின் மௌனங்களோடு
யாத்திரை செய்யும்
துணையில்லா இசையினூடே
அந்த இறுகிய நிழல்நொடிமறைய
உன் காதோர்க்கும் ஒற்றைமுடி
காற்றில் அசைந்திடக்காணா
அழிபசி கொண்டனபோல
அன்றைய காலந்தட்டிய அடைமழைத்தூவல் ,,,,,,,,,,,,,
கொடைக்கானல்
மலை சறுக்கல்களில்
ஆரோகணம் அவரோகணம் நடத்தலாமா
காண்போருக்கெல்லாம்
உனக்கும் எனக்குந்தான்
அத்தனை பொருத்தம் போலென்று
பொறாமைக்கொள்ளும் படியாக
பொய்யான ஒரு வாழ்க்கையை
திரைப்படமாகவேனும் எடுத்துவிட
சணம் நீ சம்மதிப்பாயா சகீ ,,,,,,,,,,,,,,,,,,,
இடைமுறியும் போதும்
இதிலென்ன மோகம் என
அடி நகராத இடர் நெருக்கடி ம்ம்ம்
இது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்ம்,,,,
உனக்கும் எனக்கும்
இடையிடையேத் தொடரும்
அந்த அவகாச நெரிசல்களின்போதெல்லாம்
உன் முறைத்த
பார்வைக்கதிர்களின் முன்னால்
தவிர்க்காது நீ சிராய்த்துப்போகும்
என் ஜாலங்கள்
ஒருமுறைக்கூட முறிபடாமல் ம்ம்ம்,,,,
அதே உன் கண்களுக்குள்ளேயே
தப்பிப்போன மந்திரமொன்றை
என்றேனும் நீ அறிந்திருப்பாயா சகீ,,,,,
அனுசரன்