தொடுவானம்

இப்படியெல்லாம் இரு என,
எத்தனை எத்தனை மாற்றங்கள்,
விதைக்கப்பார்த்தாய் எனக்குள் !
நினைத்துப்பார்க்க நியதியில்லாமல்,
ஓடி ஒடுங்குகிறது ஒய்யார மதி !
தேடியபடியும் நாடியபடியும்,
ஆடியபடியும் அசைந்தபடியும்,
எங்கெங்கோ இரைந்தன நெடிய நாழிகள் !
இருள் மேகங்களுக்குள்,
நிலவு நுழைந்தாற்போல்,
நினைவுதப்பி எங்கோ புகுந்தேன் !
மீண்டுவந்தபோது..................
மாண்டுவிட்டது நம் மகத்தான உறவு !
பிறகு ஒரு காதம்,
ஓய்வின்றி வாழ்க்கை,
உன் ஒய்யார இணையில்லாமல் !
சூரியன் சுள்ளென்று அடிக்க எழுந்து,
குளிர் கொல்லென்று விரட்ட உறங்கியும்,
அர்த்தமற்று அலைந்தன அனைத்துமே !
நிஜமாய் காரணம் தெரியாத குழப்பங்கள்,
கரகாட்டம் ஆடியது கனவுகளின் விளிம்பில் !
என்ன என யோசித்து எதைஎதையோ வாசித்து,
வண்ணமிழந்தது எண்ணங்கள் எல்லாமே !
மாற்றங்கள்,
புரட்டிப்போட்டது,
புழுதிக்குள் கிளர்ந்து ஓடும் காளையாய்,
எங்கோ ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஓட்டம்,
நான் எழுந்தேன் நின்றேன் நடந்தேன்,
ஓடினேன் ஒரே திசையில் அர்த்தமாய்,
என்னை செலுத்தியது ஏதோ ஒரு அசரீரி !
ஆளில்லாமல் கவனம் செலுத்தப்பட்டேன் !
நிழலில்லாதபோதும் அர்த்தமாயிருந்தது அசைவு !
உட்கார்ந்து யோசித்தேன்..............
உணர்ந்தேன்.............
ஒரு நெடிய யோசனையின் முடிவில்.............
நீ எனக்குள் விதைத்தவைகள்..............
இன்று விதை கடந்து செடியடர்ந்து..........
விருட்சமெனும் நிலைநோக்கி..............
நல்லவன் என்ற எல்லைகள் கடந்து...........
வல்லவனாகிறேனா நான்?
சொல்லடி என் காதலியே !
ஆங்.............
புரிகிறேன்...........
கானல் நீர் கலைந்துவிடுவதுதான் !
தொடுவானம் தொலைந்துவிடுவதுதான் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (22-Mar-15, 8:55 pm)
Tanglish : thoduvaanam
பார்வை : 98

மேலே