உனக்கொரு கேள்வி

ஏதோவொன்றை விழுங்கியது
விளங்கியதாய் வெறிக்கின்றாய்
நீயெல்லாம்
அதுவாகவே மணல்வெளியானாய்
புதையுண்டு கிடைக்கின்றேன் ..

ஒரே ஒரு விழியாகி
உருட்டுகின்றாய் உலகமாய்
உன் சுவை
கனவுகளாய் மிதக்கலாம்
நினைவூறிய பாகில் ...

காட்டுமல்லிகளின் குரலாய்
காது வருடும்
பூந்தேன் சொல்லொன்றை
சிவந்து சினமுற்றாலும்
கவிதையாகும் உணர்வில்
வடிவற்றிருப்பாய்....

யாரென்று நீயென்று
காண்பதற்குள்
விரும்புகின்றேன் வெறுப்பினை ..

எப்படிப் பார்த்தாலும்
தெரியாதொரு புள்ளியில்
குவிகின்றது
கன்னத்தில் சிவக்கும் விரல்கள் ...

உன் தோற்றத்தில்
ஆண் என்பானின் மென்மையும்
முறுவலாவது
விரிய மறந்த பூக்களின்
நுட்பம் ....

இப்போது சொல்
எங்கிருந்து எனக்குள்
இடைமறித்துத்
தடமூன்றுகிறாய் ?!

எழுதியவர் : புலமி (22-Mar-15, 10:35 pm)
Tanglish : unakkoru kelvi
பார்வை : 203

மேலே