உன் நினைவில் நான்

காலை எழுந்ததும்,
அலைபோலி கேட்டதும்,
உணவு உண்ணும்போதும்,
புறப்படும்போதும்,
அலைபேசியை பார்க்கிறேன்...

இருமல், தும்மல்,
விக்கல்,
எது வந்தாலும் நினைக்கிறன்,
நகைக்கிறேன்...

கண்கள்மூடி சாய்ந்தாலும்,
அயர்ந்து தூங்கினாலும்,
உன்னை நினைக்கிறன்,
உன்முகம் காண்கிறேன்...

நெருங்கி வந்த நீ
விலகி செல்வது ஏன்?

கண்வழி பேசியதை நிறுத்தி
வாய்வழி பேசியது தவறா?
நான் பேசுவதே தவறா?

வாழ்கையின் சுவையை அறிந்திட
செய்தாய்,
வாழ நினைக்கிறன்,
விலகி செல்லாதே,
தொலைந்து போவேன்...

பேசாது போனால் மறப்பேன்
என நினைத்தாயோ?
கானாதிருந்தால் கலைப்பேன்
என நினைத்தாயோ?

இதுவரை புரியவில்லை - உன்னுடன்
இருந்தவரை புரியவில்லை
விலகினாய் என்னை
விளக்கினாய் எனக்கு

சொல்ல நினைக்கிறன்
கேட்க நீ இல்லை...
சொல்வேன் என உணர்ந்ததால்தான்
நீ இல்லையா...

இருமனங்கள் இணைந்திருந்தால்
காற்றே தூது போகுமாம்...

தூது வந்தால் வா...

தினமும் உன் வருகைக்காக நான்...

எழுதியவர் : (23-Mar-15, 12:08 am)
Tanglish : un ninaivil naan
பார்வை : 896

மேலே