என்னை பேட்டி எடுக்கிறார்கள்

உங்களிடம்
நிறையப் பேசுகிறேன்
காத்திருங்கள்.

என்னை பேட்டி எடுக்க
நேரமாகிவிட்டதாம்.

நான் ஒளிப்பதிவுச்
செய்யப்படுகிறேன்.

கேள்விகள் ஆரம்பம்..

இயற்பெயர்?

இயற்கையிலேயே
எனக்குப் பெயரில்லை.
பெயர் வைத்தார்கள்.

நீங்கள் மட்டும் தான்
கனா காண்கிறீர்களா?

அதைக் காணாதச் சிலர்
என்னைக் காணும் போதாவது
அதைக் காணட்டும் என்று தான்
இப்பெயர்.

நீங்கள் தலைக்கனம் பிடித்தவர்
என்று சொல்கிறார்களே...

சிலர் கண்கள் ஏன்
எடை போடும் எந்திரமாக
இருக்கிறது என தெரியவில்லை.

இறந்த பிறகு
என் தலையை வெட்டிச்
சரியான எடை பார்த்து
இவ்வளவே இவர் தலைக்கனம்.
கல்லறையில் பதித்துவிடுங்கள்.

உங்களையே சிலசமயம்
முட்டாள் என சொல்லிக்கொள்கிறீர்?

நான் ஒரு அவசரக்குடுக்கை
மற்றவர்களுக்கு முன்
முந்திக்கொள்கிறேன்.

விருது வாங்கிய தங்களின்
'முட்டைப் பரோட்டா' நாவல் பற்றி?

அதை நீங்கள் வாசித்துவிட்டீர்களா?
(மௌனம்)
அடுத்தக் கேள்விக்குச் செல்லுங்கள்..


நீங்கள் சரியாக இரவில் தூங்குவதில்லையாமே..?

தூங்குவதற்காகத் தான்
இரவுகள் என்று உங்களிடம்
யார் சொன்னது..

நீண்ட நாள் ஆசை?

எல்லோருக்கும் புரியும்படி
ஒரு கவிதை எழுத வேண்டும்.

நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?
ஆம் எனில் தங்கள் காதலியை பற்றி..

ஜெ.... ஜெ...
ஜெயமில்லை
காதலில் எனக்கு
என்று வைத்துக்கொள்ளுங்கள்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (23-Mar-15, 8:11 am)
பார்வை : 83

மேலே