இப்படிக்கு ஒரு லூசு
கூட்டியவர் தினந்தோறும்
காட்டுமவர் கலைஞானம்
சாட்டையடிச் சொற்களோடு
வைப்பாரவர் தலைக்குட்டு.
இது வார்த்தைத் திணிப்பு...
நீ நடந்துச் செல்கயில்
பின்னால் வரும் என்னை
ஒரு முறையாவது பார்ப்பாய்
என்று தான் நினைக்கிறேன்.
ஆனால் நீயோ என்னுயிரைத்
திருப்பித் தரமாட்டேன் என்பது போல
முன்னால் பார்த்தே நடக்கிறாய்.
இதை இதய நோயாளிகள் படித்தால்
மூன்றாவது அட்டாக் வரக் கூடும்.
பரிசம் தீண்டிப் பேசுபவள்
முத்தம் தர கனவில் வா
என்பாள்..
இது கவிதை முயற்சி.
ஓசோனில் ஓட்டை
விழுந்துவிட்டதாம்
ஒப்பாரி வைக்கிறது
வானம்.
'அமிலமழை'.
இது கவிதையென ஏற்றுக்கொள்ளப்படலாம்....
இப்படிக்கு ஒரு லூசு.
--கனா காண்பவன்