காதல் வேண்டாம், நட்பே போதும்

காதல் செய்தேன்
நெஞ்சில் காயம் தந்தாள்
காதலி மட்டும்
போதும் என்று
நண்பனை தொலைத்து
நட்பை இழந்தேன்

கண்முன் தோன்றியும்
காதல் கானல் நீராய்
மறைந்தது
புரிந்தது காதல் பொய்யென்று
தொலைத்தேனே
நட்பை காதலாலே அன்று

நிழல் தரும்
மரமாய் இருந்தவனை
அடி நீ
நொடிப் பொழுதில்
புயல் காற்றாய் வந்து
வீழ்த்தி விட்டாய்.

தனிமையின் துணையில்
காதலாலே இறந்து கொண்டே வாழ்கிறேன்
நான் இறந்தால் நட்பின் துணையில்
மீண்டும் பிறப்பேன்

காதல் வேண்டாம், நட்பே போதும் .





ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (25-Mar-15, 4:11 pm)
பார்வை : 331

மேலே