இன்றே மரணித்து விடு எந்தன் தோழியே

அள்ளி முடிந்த கருங்கூந்தல்
எங்கே .?
அழகாய் ஒளிர்ந்த இரு விழிகள்
எங்கே.?
இன்னிசை பாடும்
மென்குரல் எங்கே.?
என் கவிகளுக்கு உயிர் கொடுத்த
கனிமொழி தான் எங்கே.?
வாதம் புரிந்து வம்பிழுக்கும்
வண்ணமயிலே -நீ
வார்த்தை இன்றி வாடுவதேன்
எங்கள் உயிரே .
காலன் கண் பட்டதோ
கண்ணின் மணியே
கட்டுப் பட்டு விழ்ந்தாயோ
எங்கள் உறவே ...
தேதி குறித்து விட்டார்
எங்கள் செல்வமே
இறையடி சேரும் நாள் அதுவாம்
எங்கள் செல்லமே ..
பூவிற்கே புற்றுநோயா
புரியவில்லையே -இங்கே
புழுவாக துடிக்கிறாளே
பொறுக்குதில்லையே .
அணு அணுவாய் கரைவதாலே
உந்தன் மேனியே -நீ இன்றே
மரணித்திடு எந்தன் தோழியே ...:-(
குறிப்பு :-சுமார் 6மாத காலங்கள் வைத்தியர்களின் போராட்டத்தின் பின் முடியாது என்று முடிவு தேதி குறிக்கப் பட்ட தோழி கனிமொழி இன்று வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப் பட்டார்.இவர் உடலில் ஆகக்கூடுதலாக ஐந்து கிலோ சதை கூட எடுக்க முடியாத நிலை.வேண்டிக் கொள்ளுங்கள் நண்பர்களே இப்பிறப்பில் இது போன்ற நோய் வேறு எவருக்கும் வேண்டாம் என்று :-( :-( :-(