உலகக் கோப்பை கிரிக்கெட்

நாற்பது தினங்கள் மேலாய்
திருவிழா போல் கொண்டாட்டம்
சூதாட்டம், பந்தயமென்று
மேல்தட்டு கல்லா கட்டும்...!!!

தொலைகாட்சி நிறுவனங்கள்
தொடர்களுக்கு வெட்டும் பள்ளம்
காணொளி விளம்பரத்தில்
கட்டுகட்டாய் பணமும் அள்ளும்...!!!

விலைவாசி மேலும்..மேலும்
விளம்பரத்தால் ஏற்றம் காணும்
பொருளின் விற்பனைவிலையோ
விளம்பரத்தால் மும்மடங்காகும்...!!!

விலையேற்றம் நம் சிரத்தில்
விழுவதை நாம் என்று உணர்ந்தோம்???
முட்டாளாய் கிரிக்கெட்டோடு
விளம்பரத்திற்கும் வாயே பிளந்தோம்...!!!

தேர்வு நேர கிரிக்கெட்டாட்டம்
இல்லம் விட்டு கல்வியும் ஓடும்
மாணவர்க்கு உலகக் கோப்பை
தேர்வு முடிவிற்கே வைக்கும் ஆப்பை...!!!

இல்லாத சாக்கு...போக்கு
கூறியன்றோ அலுவலக விடுப்பு
பொல்லாத கிரிக்கெட் காண - என்றோ
இறந்தவரெல்லாம் சாகடிப்பு...!!!

துட்டுக்காக மகளிர் கூட்டம்
ஒட்டுத் துணியில் ஆடுது ஆட்டம்
கண்டு ரசிக்குது சிறிசும் பெரிசும்
காண்பதில்லை பேதம் என்றும்...!!!

வேலை வெட்டி இல்லாதோர்க்கு
நாளையோட்டும் பொழுது போக்கு
படிப்பு கெட்டு ... பலவும் கெட்டு
காண வேண்டுமோ இந்த கிரிக்கெட்டு???

எழுதியவர் : சொ.சாந்தி (26-Mar-15, 11:13 pm)
பார்வை : 103

மேலே