வாசித் தருள்நாமம் ராம்

காசி தலத்திறைவன் காதி லுறைப்பதுவும்
வாசித் தொருகள்வன் வான்மீகி யானதுவும்
பூசித் தனுமன் கணந்தோறும் சொல்வதுவும்
வாசித் தருள்நாமம் ராம்.

எழுதியவர் : சு.அய்யப்பன் (28-Mar-15, 10:42 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 93

மேலே