கொம்பன் பாடல்

ஆண்:சுத்தி சுத்தி வாரேன்
சுருக்கு பை இடுப்பினிலே
இடம்மிருக்கா.
கிட்ட கிட்ட வரேன் கண்டுகிட
பயமுனக்கா.

பெண்: கொம்பனோட பார்வையில்
வம்புயிருக்கு.
வாக்கபட்டபின்னே வம்புக்கு பல
வேலையிருக்கு.

ஆண்: ஒத்தஜடை ஆடி ஆடி
ஏதோ சொல்லுது.
பக்கம் வந்து வெக்கத்திலே
மூட மாத்துது.

பெண்: ஒனக்கென்ன ஒத்திகையை
பாத்துவிட்டு நடையகட்டுவே.
படுத்திட்ட பாயோட மேனிநோகுவேன்
நீயும் துணையில்லை.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (28-Mar-15, 12:25 pm)
பார்வை : 135

மேலே