ஏதோ ஞாபகத்தில் ஜோக்ஸ்

1.
கணவன் : சொந்தக்காரங்களுக்கு கொடுக்கச் சொன்னா நாலு புடவையும் உனக்கே எடுத்துகிட்டியா?

மனைவி : ஒண்ணு எனக்கு, இன்னொண்ணு எங்க அம்மாவோட சம்மந்தியோட மூத்த மருமகளுக்கு, மூணாவது உங்க தாத்தாவோட ரெண்டாவது பேரனோட அண்ணிக்கு; நாலாவது உங்க மச்சினியோட அக்காவுக்கு !

கணவன் : (ஏதோ ஞாபகத்தில் ) சரி, சரி...

................................................................................................................................................................................................
2.

“ ஏங்க, வாஷிங் மெஷினில் துணி போடப் போறேன், கையை பிடிச்சி ஏன் நிறுத்துறீங்க? ”

“ என்ன ஞாபகத்துல போற? இது கிரைண்டர்... ! ”

...............................................................................................................................................................................................

3.

“ ரொம்ப நேரமா கிளாஸ் எடுக்கறீங்களோ டீச்சர் ?”

“ ஆமா, ப்ளஸ் டூ பாடத்தையும் ப்ளஸ் ஒன்னில எடுக்க சொல்லிட்டாங்களே? ”

“ ஆனா இது எட்டாங் கிளாஸ் ஆச்சே? ”

....................................................................................................................................................................................
4.

“ கோமளா, ஒரு வழியா அக்கவுண்ட் டாலியாயிடுச்சு; நான் ஆபிஸ் போயிட்டு வந்துடறேன்... ”

“ நாசமாப் போச்சு; இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை ! ”
................................................................................................................................................................................................
5.

புவியியல் பாடம் படிக்கிற பையன் அப்பாவிடம்: அப்பா, மடகாஸ்கர் எங்கே இருக்கு?

அப்பா: (ஏதோ ஞாபகத்தில்) உங்கம்மா கிட்ட கேளு; அவதான் எங்கயாவது தூக்கிப் போட்டிருப்பா..

...............................................................................................................................................................................................
6.

ஆபிசில் எழுத்தரும், நண்பரும்:

“ வீட்டுல ஏதும் பிரசினையா? ”

“ ஏன் கேக்கறீங்க? ”

“ பிப்ரவரி முப்பத்தி ஓராம் தேதி வரை பில் போயிருக்கே? ”
....................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (28-Mar-15, 1:16 pm)
பார்வை : 356

மேலே