என்னவளே என்னவளே

சுத்தமான காத்தே
நேத்து நட்ட நாத்தே
சுவையான கணியே
காலை நேர பனியே
அடி என்னவளே
நெஞ்சுல நின்னவளே
என்ன பிச்சுத் தின்னவளே
அன்புக்கு விளக்கம்
சொன்னவளே
எம் பொறப்புக்கு
அர்த்தம் தந்தவளே
எனக்காக பொறந்தவளே
என் இதயம் தெறந்தவளே
மனம் வீசும் மலரே
பூ மழையே
உயிருள்ள சிலையே
துள்ளி ஓடும்
புள்ளி மானே
இதயத்த கிள்ளிவிடுற
கள்ளியே
என் இதயமென்னும் கொளத்துல
கல்ல விட்டு எறிஞ்சவளே
சலனத்தால ஜனனம்
தந்தவளே
இத்யத்த துளைத்த உளியே
உளியை துளைத்த கல்லே
உயிற உரிஞ்சுற
ஒட்டுன்னியே
என்னைப் பிடித்தாட்டும் பேயே
உயிறினை உளுக்கிய நோயே
எனது இரண்டாம் தாயே
இந்த காளையக் கவுத்த
கண்ணிப் பசுவே
இந்த ராசாவ
சூடுன ரோசாவே
ஒ மடியில தா
ஏஞ் சாவே

எழுதியவர் : கவியருவி (29-Mar-15, 8:44 am)
Tanglish : ennavale ennavale
பார்வை : 209

மேலே