விளையாட்டு

வயிற்றுக்குள்
குழந்தை
எட்டி உதைத்துத் தொடர்வதே!
முதல் விளையாட்டு...

*

திறமையின்
தூண்டில் முடிச்சு

*

சோடியத்துளிகள்
சோர்வுறாது
சோதனைகளை
வீழ்த்துவது
விளையாட்டு!

*

வீரத்தின்
வைகுறுமீன்
விளையாட்டு!

*

பால் மொழி இன
வேறுபாடின்றி
கட்டிப்பிடித்து சமாதானம் அடைவது...

*

உறவை
மேம்படுத்தும் சற்சங்கம்-விளையாட்டு

*

நாடுகள்
நாட்டியமாடும் வரைமுறைக்களம்.


*

கண்டங்கள்
கைகுலுக்கும்
தேசநேசப்பகிர்வு...

*

நேசிப்பவளி(னி)ன் முதல்
காத(லி)லன்.

*

இதயத்துடிப்பு
முற்றமடையும்போது
நாடித்துடிப்பாய்த்
துடித்துத் துடித்து
நிற்பதே...!
இறுதி விளையாட்டு.


******************************************




(என் கல்லூரி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற போது...)

எழுதியவர் : திருமூர்த்தி.v (29-Mar-15, 5:32 pm)
பார்வை : 1804

மேலே