சுடர்விழி

சுடர்விழி...

சுடர்.. நாளை அப்பா இங்க வரார். நீ நாளை என்னை பார்க்க காத்திருக்க வேண்டாம்.மறுநாள் உன்னை பற்றி சொல்லி அப்புறம் நீ பார்க்கலாம் சரியா..

என்ன பேசாம இருக்க.நான் தான் சொல்றேன்ல.சுடர் என்ன யோசிக்குற..

இல்ல. உங்க அப்பா ஒத்துபாங்களா.. அதான் யோசிக்குறேன்.

நீ கவலைபடாத..நான் பார்த்துக்குறேன்.சரி நீ கிளம்பு.
அவள் தங்கியிக்கும் விடுதி வந்து விட்டு விட்டு சென்றான் தரணிதரன்.

சுடர்விழிக்கு உள்ளுர ஒரு பயம் ஒரு எதிர்பார்ப்பு மனது ஒரு நிலையில் இல்லை. அவளுக்கு அப்பா அம்மா இல்லை. தாத்தா மட்டும் தான்.தாத்தா ஏதும் சொல்லமாட்டார் என்றாலும் தரணி பெற்றோர் என்ன சொல்வார்கள் என்ற எண்ணம் அவளை விடவில்லை.

தரணியின் அப்பா அம்மா வந்துவிட்டார்கள். அம்மாவும் வந்ததில் தரணி மிக ஆனந்தம்.பேச வசதியாய் இருக்கும் என்று எண்ணினான். அவன் தங்கி இருக்கும் வீட்டிற்கு மூவரும் சென்றார்கள். மறுநாள் அப்பா அம்மா உடன் இருந்தான். எப்போது சொல்வது என்றே அவன் எண்ணம் இருந்தது.

இரவு அம்மா திருமணம் பற்றி பேசியது சற்றேன சொல்லி விட்டான். சுடர்விழி பற்றி. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் சிரித்துக்கொண்டே சரி என்றார்கள்.தரணிக்கு சந்தோசம் தாளவில்லை சுடருக்கு அழைத்து சொல்லிவிட்டான்.மறுநாள் சுடரை பார்த்துவிட்டு தரணியின் பெற்றோர் சென்றுவிட்டனர்.

தாத்தாவிடம் சொல்ல சுடர் ஊருக்கு சென்றாள். எக்காரணமும் சொல்லாமல் தாத்தா மறுத்துவிட்டார்.சுடருக்கு என்ன செய்வது,தரணிக்கு சொல்லலாமா, என்ன காரணம் என கேட்டால் எதை சொல்வது புரியவில்லை.மீண்டும் தாத்தாவிடம் கேட்டாள்.

சாதியை காரணமாய் சொன்னார்.சுடரின் அம்மா வேறு சாதியில் காதலித்து திருமணம் செய்ததால் சொந்தங்கள் ஏற்கவில்லை. தாத்தாவும் கோபத்தில் பேசவில்லை.விபத்தில் சுடரின் அம்மா அப்பா இருவரும் இறந்ததால் சுடர் தாத்தா வசம் ஆனாள். சுடர் எவ்ளோ சொல்லியும் தாத்தா கேட்பதாய் இல்லை.

தாத்தா நான் என்ன சாதி என்று உங்களால் சொல்லமுடியுமா.. எப்படி என்ன சாதி என சொல்வீர்கள். ஊருக்கு அல்ல உங்களின் மனசாட்சிக்கு அப்புறம் சொல்லுங்கள் தாத்தா என சென்றுவிட்டாள் அவளின் அறைக்கு.

பலத்த யோசனையில்
சுடர் ஏற்றி விழித்து கொள்ள செய்துவிட்டாள்.தாத்தா சுடரை அழைத்து தரணி பெற்றோர் இங்க வந்து பெண் கேட்கசொல்லமா என்றார்..

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (29-Mar-15, 11:15 pm)
பார்வை : 469

மேலே