எமதூதனின் கொல்கலைகழகம் - தொடர்ச்சி 2

மதன்..... தன் அடி வயற்றில் இருந்து கத்தினார் அந்த பெரியவர்.

அலறி அடித்து கொண்டு ஓடி வந்த மதன். "என்ன மாமா..." என்று கேட்க,

"என்ன இது புது பழக்கம். எதுக்கு என் கையெழுத்து மாதிரியே போட்டு இருக்கே?"

தன் கைகளில் இருத்த ஒரு காகிதத்தை எடுத்து காட்டி கேட்டார்.

80 வயது தொழில் அதிபர். ஒரு விபத்தில் கால்கள் இரண்டும் போய் விட்டதால் வீல் சாரில் வலம் வந்து கொண்டிருந்தார் அவர். தொழிலதிபர் கருணாமூர்த்தி என்றால் எல்லோருக்கும் தெரியும். உலக நாடுகள் அனைத்தையும் சுற்றி வந்தவர். விபத்துக்கு பிறகு வெளியல் செல்லாமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கி இருந்தார்.

அவரது அலுவலக வேலை. கணக்கு வழக்கு இவற்றை பார்த்து கொள்ள தனது தூரத்து உறவான மதனை அழைத்து வந்து தன்னுடன் வைத்திருந்தார். அந்த மதன் தான் அவருடைய கையெழுத்தை போட்டு பார்த்து திட்டு வாங்கி கொண்டிருந்தான்.

"தப்பா எடுத்துகாதிங்க மாமா... இனிவிடஷன்ல போடுறதுக்காக அப்படி செஞ்சேன்." என்று சொல்ல,

"நீ எதுக்காக செய்து இருந்தாலும் அது தப்பு தான். தெரிதா.. இனிமேல் இந்த மாதிரி எல்லாம் செய்யாதே. திரும்பவும் இது மாதிரி நான் பார்த்தால் அப்புறம் நீ உன் ஊரை பாத்து போக வேண்டியதுதான்.." என்று கோபமாக சொல்ல.

"சரி மாமா..." என்று கூறினான் மதன்.

தொழிலதிபர் கருணாமூர்த்திக்கு கோடி கணக்கில் சொத்து இருந்தது. அவருக்கு மனைவி. குழந்தைகள் யாரும் இல்லை. அதனால் தனக்கு பிறகு ஒரு சிறு சொத்தை மதனுக்கு கொடுத்துவிட்டு மீதி எல்லாவற்றையும் அநாதை ஆசிரமதிருக்கு உயில் எழுதி வைத்து இருந்தார்.

எதையோ தேடப்போன மதன் கைகளில் அந்த உயில் கிடைக்க. அதை படித்து பார்த்து ஆடி போனான்.

பிள்ளை இல்லாத சொத்து எப்போது இருந்தாலும் பின்னர் தனக்கு தான் வரும் என்று கணக்கு போட்டு இருந்தவன். தொழிலதிபர் கருணாமூர்த்தி இப்படி ஒரு உயில் எழுதி வைப்பார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

அன்றில் இருந்து அந்த சிந்தனைலேயே இருந்தான் மதன்.

"மதன்... எனோட பரத் டேக்கு யார் யாருக்கெல்லாம் சொல்லி இருக்கே."

"இன்னும் யாருக்கும் சொல்லல மாமா... நீங்க லிஸ்ட் கொடுத்தா அவங்களுக்கு சொல்லிடறேன்... " என்று மதன் கூற,

"என்னை விபத்துல இருந்து தன்னோட ரத்தம் கொடுத்து காப்பாதினாங்கலே அந்த 5 பேருக்கு மட்டும் சொல்லு. வேற யாருக்கும் சொல்ல வேணாம். அப்புறம் அந்த 5 பேருக்கும் ஆளுக்கு 25 லட்சம் செக் போட்டு எடுத்துகிட்டு வா. இந்த பரத் டே அன்னைக்கு அவங்களுக்கு கொடுத்துடணும்.." என்று சொல்ல.

"ஒன்ற கோடியை கிழவன் எப்படி அழிகிறான் பாரு..." என்று மனதுக்குள் நினைத்து பார்த்து கொண்டான் மதன்.

"விடக்கூடாது... இப்படி விட்டால் கடைசீஇல் தனக்கு எதையும் தர மாட்டான். ஏதாவது செஞ்சி இதை தடுக்கணும்..." மதனின் மனது திட்டம் தீட்ட தொடங்கியது.

"மதன்..." மீண்டும் அழைத்தார் கருணாமூர்த்தி.

"என்ன மாமா.." அருகில் சென்று கேட்டான் மதன்.

"அந்த 5 பேரோட போன் நம்பரை கொண்டு வா. நானே பேசி சொல்லிடறேன்." என்று கூற,

"மாமா... இப்ப சொன்ன அதுல சுவாரசியம் இருக்காது.. பர்த்டே அன்னைக்கு சொல்லி கொடுங்க.. " அவர் பேச்சுக்கு முட்டு கட்டை போட்டான் மதன்.

"அதுவும் சரிதான். சரி. பரத்டே க்கு அவசியம் வாங்கனு நானே கூப்பிட்டு சொல்லிடறேன். நீ அவங்க போன் நம்பரை மட்டும் கொடு" என்று கேட்டவரின் வார்த்தைகளை தட்ட முடியாமல் அந்த 5 பேரின் நம்பரை கொண்டுவந்து கொடுத்தான் மதன்.

ஒவொருவருக்கும் போன் போட்டு, வர சொல்லி கொண்டிருந்தார் தொழிலதிபர் கருணாமூர்த்தி .

தொழிலதிபர் கருணாமூர்த்தி இன் பிறந்த நாளுக்கு 15 நாட்கள் இருந்தது.

இந்த 15 நாட்களில் என்ன செய்யலாம் என்று யோசித்தான் மதன்.

(தொடரும்)

எழுதியவர் : sujatha (30-Mar-15, 5:07 pm)
சேர்த்தது : கலைமணி
பார்வை : 290

மேலே