எமதூதனின் கொல்கலைகழகம் - தொடர்ச்சி 3

ஏகாம்பரம் கத்திய கத்தில் இன்ஸ்பெக்டர் அவரது இருக்கைக்கு ஓடி வந்தார்.

"ஏட்டையா என்னாச்சி உங்களுக்கு" என்று இன்ஸ்பெக்டர் கேட்க..

"இத பாருங்க சார்" என்று வந்த கடிதத்தை காட்டினார் ஏகாம்பரம்.

கடிதத்தை படித்த இன்ஸ்பெக்டருக்கு தூக்கி வாரி போட்டது.

உடனே கோடம்பாக்கம் ஸ்டேஷனுக்கு போன் போட்டு.
"சார். நான் அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் பேசறேன். ரெண்டு நாளுக்கு முன்னாடி உங்க ஏரியால ஏதாவது கொலை கேசு புக் ஆகி இருக்கா..."

"ஒரு நிமிஷம் இருங்க.." என்று சொல்லிய கொஞ்ச நேரத்தில்.

"ஒன்னும் புக் ஆகலியே சார். ஒரே ஒரு தற்கொலை கேசுதான் நடந்து இருக்கு. அதுவும் வேலை கிடைக்காத காரனத்தால விஷம் குடிச்சி தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்கான். அவன் நண்பனே வாக்குமூலம் கொடுத்து இருக்கான். அந்த கேசையும் முடிசிடோமே"

"சார், இறந்தவனோட பேர் என்னனு சொல்லுங்க"

"ஒரு நிமிஷம்... ம்... . பேரு வந்து வரதராஜன்.. வயசு 30...," என்று சொன்னதும் அதிர்ச்சியோட எல்லைக்கே போன இன்ஸ்பெக்டர்.

" சார் அது தற்கொலை இல்ல... கொலை... " என்று சொல்ல.

மறுமுனை அதிர்ந்துபோய்

"என்ன சொல்லறிங்க சார்" என்று கேட்டது.

"ஆமா சார். அது திட்டமிட்ட கொலை.
"
"உங்களுக்கு எப்படி தெரியும்? "

"ரெண்டு நாளுக்கு முன்னாடி ஒரு தபால் வந்தது. எந்த கிறுக்கனோ செஞ்ச வேலைன்னு கண்டுக்காம விட்டுடோம்... இப்ப இன்னொரு கடிதம் வந்தது. அதாலதான்..." என்று சொல்ல.

"சார் ரெண்டு கடிதத்தையும் எடுத்துகிட்டு சீக்கிரம் கமிஷனர் ஆபிசுக்கு வாங்க சார்" என்று சொல்லி மறுமுனை துண்டித்தது.

"ஏட்டையா. முன்னாடி வந்த அந்த லெட்டர் எங்க இருக்கு... என்று இன்ஸ்பெக்டர் கேட்க.
"அத்தான் சாரி தேடிகிட்டு இருக்கேன்" என்று சொன்னார் ஏகாம்பரம்.

"ஐயோ இப்ப நான் என்ன பதில் சொல்றது... ஊர்ல கிறுக்கு பசங்க நிறைய ஆயட்டானுங்க.. எப்படி எப்படி எல்லாம் சையரானுங்க..." புலம்பிக்கொண்டே தேடினார் ஏகாம்பரம்.

"சார் இதோ இருக்கு சார். அந்த லெட்டெர்.. " மேசைக்குள் இருந்து எடுத்து கொடுத்த கடிதத்தை மீண்டும் படித்தார் இன்ஸ்பெக்டர்.

"வருகிற 17 தேதி கோடம்பாக்கத்தில் இருக்கும் வரதராஜன் என்பவரை கொலை செய்ய போகிறேன். முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள்." என்று இருந்தது அந்த வாசகம்.

சொன்ன மாதிரியே செஞ்சிட்டானே. இவன் யாராக இருக்கும்... என்று யோசித்தவாறே பைக் ஸ்டாட் செய்தார் இன்ஸ்பெக்டர். பைக் கமிஷனர் ஆபீசுக்கு பறந்தது.

(தொடரும்)

எழுதியவர் : sujatha (30-Mar-15, 6:05 pm)
சேர்த்தது : கலைமணி
பார்வை : 305

மேலே