போக்குக்காட்டும் கிழக்கு-ரகு
ஈக்கள் கூட அருவெறுத்து
திசைக்கொன்றாய்ப் பீறிட
முடிச்சிட்ட அபத்தத்தில்
நாசி சகிக்கின்றாள்
நம்தேசத்துப் பேதை !
எதற்கும்
நிழலற்றுப் போகும் போக்கு
அவனைக் கிடத்திவிடுகிறது
சுட்டெரிக்கும்
சூரியப் பாதைகளில்
அவ்வப்போது
தெளியத் தோன்றுகிற தலைவலி
வாழ்வியவல்ல வலிகட்கு
நதிமூலமாகிறது
தலைக்கேறும் போதை
தவறாமல்
கெக்காளமிட்டுச் சிரிக்கும்
முக்காலத்தையும்
அவன் நிதானத்தில்
இல்லையென்று யார் சொன்னது
மில்லியளவிலும்
குறை நிறையற்றுத் தண்ணீர்
கலக்கும் திராணி
கடைசி இரத்தாலின்
மதுவிலும்
அவன் பாதை அவன் வீடு
அவன் மனைவி மாறாமல்
தள்ளாடியும் வந்தடைகிறான்
கண்ணீரில் நனையும்
முந்தானைக்குப்
போக்குக்காட்டும் கிழக்குக்குத்தான்
இப்போது நிதானமில்லை

