மரம் போல்வர்

பண்பில்லாத மனிதன்
படித்தென்ன பயன்
மனமென்னும் அகழியில்
நல்லெண்ணம் எனும் விதையை
விதைக்காத மனிதன்
கல்வி கற்றென்ன
செயலெனும் வேள்வியை
சரியாகச் செய்யாதவன்
படித்தென்ன
மரங்களைக் காக்க
மனமொன்று கொள்ளாதோர்
மலை போல் அறிவுடையவானாலும்
மரம் போல்வர்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Apr-15, 1:38 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : maram polvar
பார்வை : 102

மேலே