ஓவியம்
![](https://eluthu.com/images/loading.gif)
மனதை இறுக பிடித்து கசக்கும்
மலர் போல மெல்ல வருடும்
நக கீறல்களில் உதிரம் வழியும்
பேச்சற்று வாய் பிளக்க வைக்கும்
நிற்கும் நடக்கும் தறிகெட்டு ஓடும்
ஒரு ஓவியத்தை பார்த்த மட்டில்
என் ஆழ்மனதில் உணரும் சலனம்
கொஞ்சம் அதிகம் தானோ இல்லை
தாக்கம் இன்னும் தாண்டுமோ எல்லை