என்ன பயன்

சிட்டுக் குருவி இணையொன்று
........செந்திடல் வாழ்ந்து வந்தன வாம்;
...................செந்திடல் நின்ற புங்க மரம்
.................................சிற்றில் கட்டிட உதவிய தாம்.

மட்டு மனிதரின் கைபட்டு
.........மரமும் திடலும் மறைந்தது வாம்;
.....................மரமும் திடலும் மறைந்த தனால்
..................................மருகிப் போயின குருவிகள் தாம்.

முட்டை யிடுவது இனியெங்கே?
.......முணங்கிக் கேட்டது பெண் குருவி.
....................முத்துக் கண்ணீர் சிந்தாதே,
......................................முயல்வோம் என்றது ஆண் குருவி.


கோயில் சென்றன- இடமில்லை;
.........குளத்தைச் சுற்றின, குளமில்லை
........................கூடம் பார்த்தன முடியவில்லை
...............................................கூளம் கிளறியும் பலனில்லை...

வாயில், கோட்டை கோபுரங்கள்
.........வாகனம், வானுயர் கட்டடங்கள்
........................வளைந்து செல்லும் தார் ரோடு
..........................................வகை வகை இரும்புக் கட்டமைப்பு ...

ஆயிரம் இடங்கள் அலைந்தனவாம்...........
.........ஆருயிர் தரித்திட வழியின்றி;
.....................ஆடி அடங்கிய பறவையினம்
...................................அதுதான் விதியென விழுந்ததுவாம்... !

“எளிய ஈருயிர் வாழ்வதற்கு
.......ஏற்ற இடத்தைக் காட்டிடுவேன் ! ”
.............................என்றது அண்டங் காக்கை யொன்று
............................................இடுகாட்டை கண் காட்டியதே ! !

மலிந்த பூம்புதர் பரப்பினிலே
.......மனிதரின் மண்டை யோட்டிடையே
.....................மகிழ்ந்து அமர்ந்தது பெண் குருவி.... !
......................................மனம் போல் முட்டை இட்டதுவே... !

அழியும் மனிதர் கல்லறையில்
..........ஆயிரம் உயிர்கள் தழைக்கு மென்றால்
......................ஐயோ மனிதா, நீ கொண்ட
.................................ஆறாம் அறிவால் என்ன பயன் ???????

எழுதியவர் : அருணை ஜெயசீலி (1-Apr-15, 7:33 pm)
Tanglish : yenna payan
பார்வை : 364

மேலே