முதல் சந்திப்பு
சூரிய ஒளியின் நிழல் கொஞ்சம் அனலாய் என்னுள்......
செய்யாத தவறுக்கு தண்டனையாய் நான் பெற்ற வரம் அன்றைக்கு....
அனலாய் மழைத்துளிகள் கண்ணைத் தாலட்ட.....
கொஞ்சம் அழுகையோடு அவள் அருகில் நான்.....
வானமும் பூமியும் உடைந்து நொறுங்கிய மனச் சிதறலில் அவள் மழலைப் பேச்சு...
கொஞ்சம் மௌனத்தில் நான்.....
உடைந்து நொறுங்கிய என் உலகை மீட்டு எடுப்பதாய் அவள் வார்த்தைகள்......
முதல் சந்திப்பு முற்றும் பொழுதினில் கொஞ்சம் தெளிந்த என் மனசு....
அறையை விட்டு வந்த நான்...
உள்ளேயே விட்டு வந்த ஆன்மா.....
என் அக்காவின் முதல் சந்திப்பின் நினைவில்...
-கீர்த்தி....