நீளவேனி

அவள் ஒரு தேவதை

மேக உடையினில்
மின்மினி பூச்சிகளாய்
பதித்த நட்சத்திர கட்களோடு
நிலவை திலகமாய்
இட்டு வலம் வந்தாள் நீளவேனி

சில நேரம் கோபமாய் கொதிப்பாள்-வெயிலாய்

சில நேரம் சோகமாய்
கண்ணீர் சிந்துவாள்-மழையாய்

சில நேரம் எனை பின்தொடர்வதாய்
ஏமாற்றுவாள்-மேகமாய்

அவள் ஒரு தேவதை
நீளவேனி(வானம்)

எழுதியவர் : ரம்யா (2-Apr-15, 1:32 pm)
பார்வை : 84

மேலே