கோடை வெயில்
கோடையில் ஓர் மழை
கொட்டித் தீர்க்கும் ஓரிடத்தில்
கொதிக்கும் வெயில் பதிக்கும்
வெப்பத்தை பல்வேறு இடங்களில்
மேகத்தின் மந்தாரம் சூரியனை மறைத்திட
பூமியில் கார்மேகம் மழை வரும் போல்
ஏமாற்றி மறைந்திடும் மந்தார நிழல்
ஒரு நிமிடம் இருநிமிடம் வந்து வந்து போகுமே
அந்த நிழல் நீடிக்க பொறுத்திடாத சூரியன்
தன் வெப்பம் தணியாது தரணி எங்கும்
கோடையில் தனதாட்சி தந்து மனம் புழுங்க வைப்பான்
அவன் ஆட்சி சகிக்க முடியா உயிரினங்கள்
படும் அவதி கொஞ்சமல்ல
காற்றும் கூட வெப்பத்தினால் புழுங்கி வரும்
பூமியில் நீர் நிலைகள் சூடாகி வற்றி விடும்
இது என்ன உயிரினங்கள் வதை படும் காலமா
கொடுங்கோலன் ஆட்சியா என்று மக்கள்
மனம் நொந்திடாத வெதும்பிடாத
கோடை காலம் வர வேண்டும்
கொதிக்கும் வெயில் வர வேண்டாம்
சூரியனே உன் ஒளி கண்டு பூரிக்க
பூமி எங்கும் நிறைந்து இருப்பாய் நீ
உன் ஒளியில் வாழ்கின்ற பூமியிது
உன் பொற்கரத்தால் வீசுகின்ற வெப்பத்தினை
தணித்து விடு இல்லை என்றால்
நீர் மேகம் கார் மேகம் புடை சூழ வந்து விடு