நான் ரசித்த அந்த ஒருநாள் 555

ஒருநாள்...

என் வீட்டு ஜன்னல் வழியே
நான் கண்ட தென்னைமரம்...

ஓலைகளுக்கு நடுவே
கொளைவிட்ட இளநீர்...

பக்கத்து வீட்டு மாடியில்
சில புறாக்கள்...

தென்னை மரத்தில் ஓடியாடி
இரண்டு அணில்கள்...

என்னை பார்த்து சிரிக்கும்
என் வீட்டு ரோஜா செடிகள்...

விண்ணில் ஓடியாடிய
வெண்மேகம்,கார்மேகம்...

எங்கயோ கேட்ட
மழலையின் அழுகுரல்...

வரிசையாக செல்லும்
எறும்புகளின் அணிவகுப்பு...

வேப்பமரத்தில் அமர்ந்து
சப்தமிட்ட காகம்...

இயற்கையோடு நானும்
ஒருவன் ரசித்தேன்...

என்னை மறந்து...

சோகங்கள் மனதில்
நிரம்பி இருந்தாலும்...

இயற்கை ரசிக்கும் நேரங்களில்
மறந்து போகும்...

வலி தரும் நினைவுகள்...

இயற்கையை நேசிப்போம்
சந்தோசத்தை பெறுவோம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Apr-15, 7:14 pm)
பார்வை : 291

மேலே