ஒன்று
தனித்திருக்கும்
தணியாத தாகம்
பிடித்திருந்து
உழைக்க வைக்கும்
விழித்திருக்கும்
விடாமல் விரட்டி
பிறரிடமிருந்து
முன்னிலை படுத்தும்
துணிந்திருக்கும்
துவளாமல் போட்டி
பொறாமையிலிருந்து
அரணாய் காக்கும்
அணிந்திருக்கும்
மாலைகள் பதக்கம்
புன்முறுவலுடன்
புகைப்படத்தில் மிளிரும்