கைக்குட்டை
என் முகத்தை
அடிக்கடி முத்தமிடுபவள்
என்னை விட என்னை
அதிகம் ரசிப்பவள்
என் சுயம் துடைத்தே
அழுக்கானவள்
கண்டவர் காண விரும்பா
என் கண்ணீர் துடைத்தவள்
வெயில் தவிர்க்க குடையானவள்
தலை துடைக்க தாயானவள்
வெட்கப்படும் வதனம்
மறைக்கையில்
அவள் ஹைக்கூ
சிதறிய சிரிப்புகளை
சிறை பிடிக்கையில்
அவள் கவிதை