காசினி அறிந்திடுமா

காசினி அறிந்திடுமா....?

என் -
உள்ளங்கை
தொட்டு....
உணவெடுக்கும்
ஓ..... சிட்டே.....!

என்-
உள்ளத்தில்
மலர வைத்தாயே....
ஒரு கோடி -
இன்பத்தின்
மலர் மொட்டை....!

உன்னழகு
பட்டுடல்....
தொட்டு ,
பழகிய அந்நாளே
தேன்....! சிட்டு...!

முற்றத்தில்
முகம்பார்க்கும்....
கண்ணாடியின்
முன்னோடி
அலகாலே....
முத்தமிடும்
பேரழகுப் -
பெட்டகமே...!

மோட்டு வளைக்
கூட்டில்....
போட்டு வைத்த
முட்டையோட்டுக்
குஞ்சுகளை....!

நீ -
காக்கும்
கனிவைக்......
இக் காசினி
அறிந்திடுமா....?

எழுதியவர் : இராக. உதய சூரியன். (2-Apr-15, 9:27 pm)
பார்வை : 56

மேலே