உரிமை
உன்னாலேயும் தான் போடமுடியும் மெட்டு
நீ பேசுவது எல்லாம் தானே பாட்டு
நீ கேட்பது எல்லாம் தானே அசரீரி
உனக்கு நான் வேண்டுமா
மத இறை வேண்டுமா
பிணப் பண்டிகை வேண்டுமா
எதுவும் உன் பசி போக்குமா
எதுவும் உன் உரு ஆகுமா
உனக்கு நீயே இறைவனாவாய்
அந்த இறைவனாம்
மனிதநேய உரிமை எனும் உணர்வை நீ தொழுவாய்