என்ன இந்த வாழ்க்கை

என்ன இந்த வாழ்க்கை ......

விழுந்து கிடந்தாலும்
வீணாப் போன
வாழைப் பழத்தைப் போல
நசுக்கி செல்கின்ற
சில்லு வண்டி மனிதனடா

மூட்டை மூட்டையாய்
களைப்பை சுமந்து கொண்டு
காசு சேமிக்க அசாதாரணமாய்
அலைந்து திரிகிறான்
அருகில் இருப்பது
என்னவென்று கூடத் தெரியாமல்

விழுந்து கிடப்பது -ஒன்றும்
வானத்தின் இடையே இடை நீச்சல்
போடும் நிலையான மரத்தின்
சிற்றிலை இல்லையாடா

சீதனமாய் கடவுள் கொடுத்த -உன்
துணை மனிதனடா -இவர்கள்
உன் உருவத்தொடுதான்
இன்னும் நடமாடுகிறார்கள் -இவர்களை
மறைத்து விட்டாயா அல்ல -உன்
அவசர வாழ்க்கையில் மறந்து விட்டாயா

புழுதி மண்ணோடு -உன்
மனதும் பழுது அடைந்து
சகதியாய் சாக்கடையில்
ஊறி போய் விட்டது

சகதியாய் வாழும் வரை உனக்கு -இந்த
அகதிகள் எல்லாம்
பாலைவனப் பூக்கள் போலத்தான்
காய்ந்த மண்ணில்
கசக்கிப் போட்ட அவர்கள் வாழ்க்கை

அடையாளம் தெரியாமால்
அறுபட்டுக் கிடக்கிறார்கள்
அலைமோதிய படகு போல
நாட்டை விட்டு கூண்டுக்குள்

சிறை பிடிக்கப்பட்டோதோ உடல்கள் அல்ல
உயிர் வாழும் உரிமைகள் தான்
மீட்க ஏன் மீட்புப் படை
மீழ வைக்கவே தமிழ் எனும் உறவு
தலை நிமிந்து நிற்கின்தே எங்கும்

இனி
கண்ணீர் துடைக்க
இரு கைகள் வேண்டாம் -இப்போதைக்கு
சிறு காகிதம் போதும் -இவ்
வாழ்க்கையை -சில
நொடிகளுக்கு மறைத்து வைப்போம்
எழுத்து தள மன அறைக்குள் கவிதையாய் .............

எழுதியவர் : கீர்த்தனா (2-Apr-15, 10:31 pm)
பார்வை : 737

மேலே