சிதறல்
 
            	    
                மீண்டும்
அமுத நஞ்சின் மயக்கத்தில் 
சிக்க விரும்பாமல் 
தொட்டில் சிறைக்குள்ளே அடைகாத்தேன் 
மௌனமாய் என் அழுகுரல் ஓசையை ..... 
நிதம் எழுப்பும் அலாரமாய் 
உன் கூக்குரல் ஓசை.... 
தினம் கேட்கும் சுப்ரபாதமாய் 
உன் அன்பின் ஆரவாரம்..... 
அலகை மார்பாக்கியே 
அமுதம் ஊட்டும் 
அதிசயம் நீ...
திண்ண அடம்பிடிக்கும் 
உன் குஞ்சுகளுக்கான 
உன் கதையில் பொம்மையாய் 
தொட்டிலில் நான் ....
இரை தேடச் சென்ற பிரிதலில் 
உன் குஞ்சுகளின் அழுகை கலைக்க 
நான் பேசியதே "உங்கா" பாசை.... 
சேர்ந்துண்ணவே மறுதலித்தேன் 
சேர்ந்துண்டே சிறகடித்தோம்.... 
உன் குடும்பத்தின் அடைக்கலமாய் என் வீடு 
என் வீட்டின் அடையாளமாய் உன் குடும்பம் 
சருகுகள் சேர்த்தே கட்டிய உன் வீட்டால் 
என் வீடெங்கும் அன்பின் சிதறல் 
சருகுகளாய் கலைந்த சொந்தங்களால்
இன்று வெறுமையாய் 
என் வீடு 
தினமும் மறுதலிக்கிறேன் 
உன்னோடு உறவாடி உணவார
எனக்கான உணவை 
      *********** பார்த்திபன் ************
	    
                
