நான்கு வழிச் சாலை
*
செல்லரித்த
கதவுகளுக்குள்ளும்
சிதறிக் கிடக்கும்
செங்கல்களுக்குள்ளும்
சிக்கித் தவிக்கிறது
தலைமுறைக் கனவுகள்
இடிந்த வீடுகளின்
இடர்பாடுகளுக்குள்
நினைவுகளை மட்டுமே
விட்டுச் சென்ற
நான்கு வழிச் சாலையை
கடக்கும் பொழுதெல்லாம்
காதில் விழுகிறது
வாழ்ந்த குடும்பத்தின்
அழுகுரல் ஓசை........

