மங்கலக் குங்குமம்

அவருக்கு அன்பு விழா எடுத்த்னர்
வாரிசுகள் அன்னை அபிராமி ஆலயத்தில்
ஆயிரம் நிலவு பார்த்த நிகழ்வு போற்றி
அவர் சொன்னார் அபிராமி திருமுன்பு :
அன்னையே ஆயிரம் நிலவு
நான் பார்த்ததாக சொல்கிறார்கள்
ஆனால் வாழ்வில் நான் பார்த்தது ஒரு நிலவைத்தான் !

உதிக்கின்ற செங்கதிரெனத் நெற்றியில் துலங்கும் குங்குமம்
கழுத்தில் தாழத் தொங்கும் மங்கல நாணுடன்
நாணத்தில் சிரித்தாள் அருகில்
அந்த தேயாத பொன் நிலா !

கவின் சாரலன்

கவிக் குறிப்பு : உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் ...அன்னையைப்
போற்றும் அபிராமி அந்தாதியின் முதல்வரி
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் என்று இன்னொரு
துதியில் சொல்லுவார் அபிராபிப் பட்டர்
படம் :
அபிராமி ஆலயக் கோபுரம்
அமாவாசை இரவில் அன்னை நிலவு நிறுவிய வானம்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-15, 10:13 am)
பார்வை : 77

மேலே