மரணம் தந்தாலும் தவறே இல்லை கவிஞர் இரா இரவி

மரணம் தந்தாலும் தவறே இல்லை ! கவிஞர் இரா .இரவி !

மண்ணில் இருந்து நெல்மணிகள்
விளைவிக்கிறான் மகத்தான உழவன் !

உலகத்தாரின் பசி போக்கும்
உழவன் தொழ வேண்டியவன்
என்றார் வள்ளுவர் !

மண்ணை நெல்லில் கலக்கின்றனர்
மனிதாபிமானமற்ற மனித விலங்குகள் !

அரசு அதிகாரிகளும் விலங்குகளுடன்
வைத்தனர் கூட்டணி !

சில நாட்கள் முன்னே
சிறு பிஞ்சுகள் குடிக்கும்
பாலில் தண்ணீர் கலந்தனர் !

அறம் செய்கிறான் உழவன்
பாவம் செய்கின்றனர் பாவிகள் !

மரண தண்டனையில் எப்போதும்
உடன்பாடு இல்லாதவன் நான் !

மரண தண்டனையில் உடன்படுகிறேன்
இவர்கள் விசயத்தில் நான் !

பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள் !
பாவிகளுக்கு மரணம் தந்தாலும் தவறே இல்லை !

பணத்திற்காக எதுவும் செய்யும்
பாவிகள் ஒழிந்தாலே நாடு நலம் பெறும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (3-Apr-15, 8:35 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே